Enable Javscript for better performance
கோ-ஆப்டெக்ஸ் கிடங்கில் ரூ.7 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கோ-ஆப்டெக்ஸ் கிடங்கில் ரூ.7 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு

    By DIN  |   Published on : 10th October 2016 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் கோ-ஆப்டெக்ஸ் கிடங்கில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான துணிமணிகள் சனிக்கிழமை இரவு திருடு போயின.
    வேலூர் அப்துல்லாபுரத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கைத்தறி துணிகள், பட்டுப் புடவைகள் வைக்கப்பட்டுள்ளன.
    சனிக்கிழமை இரவு கிடங்கின் கேட்டை பூட்டி விட்டு இரவுக் காவலாளி அவரது அறையில் படுக்கச் சென்றுள்ளார்.
    இதையடுத்து, சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரும்புக் கேட்டை திறந்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான துணிகளை திருடிச் சென்றனர்.
    தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆரோக்கியம் திருடு போன கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நேரில் விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai