சுடச்சுட

    

    தனியார் நிலத்தில் மண் விற்பனை: பொக்லைன், டிராக்டர் பறிமுதல்

    By DIN  |   Published on : 10th October 2016 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டறம்பள்ளி அருகே நிலத்தில் பள்ளம் தோண்டி மண் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.
    நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் கொண்டகிந்தனப்ள்ளி மேலூர் வட்டத்தில், உரிய அனுமதியின்றி நிலத்தில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி மண்ணை பதுக்கி வைத்து, பச்சூர், கொத்தூர் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்து வருவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை மாலை வட்டாட்சியர் சச்சிதானந்தம் தலைமையில் வருவாய்த் துறையினர் மேலூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹரீஷ் என்பவருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் பள்ளம் தோண்டி மண் எடுத்துக் கொண்டிருந்த பொக்லைன் இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    அவற்றை நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வட்டாட்சியர் சச்சிதானந்தம், மேலூர் பகுதியைச் சேர்ந்த ஹரீஷ் மீது மேல்நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் சார்-ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai