சுடச்சுட

    

    ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில், ராணிப்பேட்டையை அடுத்த ஓட்டேரி திருவேங்கடப்பா கோயிலில் புரட்டாசி மாத 4-ஆம் சனிக்கிழமை விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், 44 மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் வழங்கும் விழா, ஸ்ரீ ராமானுஜரின் வரலாறு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் சிவலிங்கம் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்துப் பேசினார்.
    ஓட்டேரி கிராம நாட்டாண்மைதாரர்கள் ஜெகநாதன், செளரிராஜன், நாகேஷ்,பி.என்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்டேரி கருணாகரன் வரவேற்றார். அறக்கட்டளை ஆலோசகர் ஆற்காடு ந.சோமசேகரன் ராமானுஜர் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து குத்துவிளக்கேற்றி வைத்துப் பேசினார்.
    விழாவில் பேராசிரியர் ஜா.அருணாசலம் பங்கேற்று 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகளும், திருப்பாவை பாடல் ஒப்பித்தல் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு எழுது பொருள்களும் வழங்கி ஸ்ரீ ராமானுஜரின் வரலாறு என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். ஓட்டேரி கிராம பெரியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai