சுடச்சுட

  

  தேர்தல்: ஒப்படைத்த துப்பாக்கிகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்

  By DIN  |   Published on : 10th October 2016 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால்,
  ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  உள்ளாட்சித் தேர்தல் அக். 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படுமென மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து வங்கிகள் பாதுகாப்புக்கு உரிமம் பெறப்பட்ட 366 துப்பாக்கிகளைத் தவிர்த்து தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக பெறப்பட்டவற்றை உடனடியாக ஒப்படைக்க மாவட்டக் காவல் துறை அறிவுறுத்தியதால், 650 துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.
  இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
  இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், தேர்தலை முன்னிட்டு காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். உள்ளாட்சித் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்பட்டாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai