சுடச்சுட

    

    மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகைக்கு சிறுபான்மையின மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 11th October 2016 04:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 1 பயிலும் தகுதியான சிறுபான்மையின மாணவிகள் மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதார சூழல் காரணமாக கல்வியைத் தொடர சிரமப்படும் சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவிடும் வகையில், மத்திய அரசின் மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மதத்தைச் சேர்ந்த பிளஸ் 1 பயிலும் மாணவிகளுக்கு மெளலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ. 12,000 கல்வி உதவித் தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நடப்பாண்டில் 1,873 சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. சிறுபான்மையின மாணவிகள் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்று நடப்பாண்டில் (2016-17) மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 1 படிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருவாய் ஒரு லட்சத்துக்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
    விண்ணப்பப் படிவங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து பெற்று உரிய சான்றிதழ்களுடன் செயலாளர், மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை, புதுதில்லி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடந்த 2015-16-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai