சுடச்சுட

    

    ஆம்பூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
    கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் (45). இவர் பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
    ஆம்பூர் பகுதியருகே ரயில் வந்தபோது, படிக்கட்டிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதில் தாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai