சுடச்சுட

  

  குடியாத்தம் வள்ளலார் வழிபாட்டு சேவா சங்கம் சார்பில், புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயில் வளாகத்தில் வள்ளலார் அவதாரத் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
  நிகழ்ச்சிக்கு யோகா குரு கே.என்.வேணுகோபால் தலைமை வகித்தார். தொடக்க நிகழ்ச்சியாக அகவல் பாராயணம், விளக்கொளி வழிபாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நினது திருவடி என்ற தலைப்பில் கோ. வீரையபத்தர், அழி பசி என்ற தலைப்பில் புலவர் சண்முக செங்கல்வராயன் ஆகியோர் ஆன்மிக உரையாற்றினர்.
  கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், தக்கார் மா.மாதவன், நகர்மன்ற உறுப்பினர் வி.ஜி.பழனி, ஜெ.ஜோதி, ராம.வேணுகோபால், வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai