சுடச்சுட

    

    வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

    By DIN  |   Published on : 10th October 2016 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற தகுதியானவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்ட அறிக்கை:
    கடந்த 2011 ஜூலை 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலாண்டில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பட்டப்படிப்பு, மேல்நிலைக் கல்வி, பட்டயப்படிப்பு, பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்கள் நடப்புக் காலாண்டுக்கு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாள்களில் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கெனவே உதவித் தொகை பெறுபவர்கள் உதவித் தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டு கழித்து, இரண்டாம், மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் பணியில் இல்லை என்ற சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும்.
    வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுபவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பித்து, அதுகுறித்த விவரத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.
    வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறினால் உதவித் தொகை உடனடியாக நிறுத்தப்படும். இத்திட்டத்தில் உதவித் தொகை பெறுவதால் பதிவு ரத்தாகாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai