சுடச்சுட

    

    சிறப்பங்காடியின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு

    By DIN  |   Published on : 12th October 2016 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாலாஜாபேட்டையை அடுத்த தேவதானம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து ரொக்கம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    வாலாஜாபேட்டையை அடுத்த தேவதானம் அணைக்கட்டு சாலை பகுதியில் குமார் சிறப்பங்காடி நடத்தி வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சிறப்பங்காடியை குமார் பூட்டி விட்டுச் சென்றார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், சிறப்பங்காடியின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைப் பார்த்து குமாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
    இதையடுத்து கடைக்கு வந்த குமார், உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 16 ஆயிரம் ரொக்கம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
    இதுகுறித்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் குமார் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai