சுடச்சுட

    

    சோளிங்கரில் உள்ள சோழபுரீஸ்வரர் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
     சோளிங்கரில் பழைமைவாய்ந்த சோழபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் குருக்களாக பாலகுமாரன் மற்றும் காவலாளி மூர்த்தி ஆகியோர் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜைகள் முடிந்ததும் கோயிலை பூட்டி விட்டுச் சென்றனர். திங்கள்கிழமை காலை கோயிலை திறக்க வந்த குருக்கள் பாலகுமாரன் மற்றும் காவலாளி மூர்த்தி ஆகியோர் கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.  உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
     கோயில் வளாகத்தை சுற்றிப் பார்த்தபோது ராஜகோபுரம் அருகே உள்ள மறைவான இடத்தில் உண்டியலை வீசி விட்டு, அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது.
     இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் பரந்தாமகண்ணன் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் உதவி ஆய்வாளர் ஜவ்வாது உசேன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai