சுடச்சுட

    

    வந்தவாசி அருகே திமுக பிரமுகரின் இரு சக்கர வாகனம் எரிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     வந்தவாசியை அடுத்த வாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், அனக்காவூர் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். கண்ணன் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டில் தூங்கியுள்ளார். நள்ளிரவு தீப்பிடித்து எரியும் சப்தம் கேட்டுள்ளது. பின்னர், கண்ணன் வெளியே வந்து பார்த்தபோது, அவரது இரு சக்கர வாகனம் எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
     இதையடுத்து கண்ணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அப்போது, இரு சக்கர வாகனம் அருகே பாட்டில் ஒன்று உடைந்து சிதறி கிடந்தது தெரியவந்தது. இதனால் மர்ம நபர்கள் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி எடுத்து வந்து மோட்டார் சைக்கிளை எரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டதுடன், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai