சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே கொலை செய்யப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது

    By DIN  |   Published on : 12th October 2016 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பத்தூர் அருகே அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருச்சியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் என்பது அடையாளம் தெரிந்தது.
    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே பள்ளத்தூர் கூட்டுச் சாலை அருகே கடந்த 8-ஆம் தேதி 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் காயங்களுடன் கிடந்தது தெரியவந்தது.
    தகவலறிந்து வந்த கந்திலி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், போலீஸார் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
    இந்நிலையில், இறந்தவர் திருச்சி மாவட்டம், உறையூர், கல்லங்காடு பகுதியைச் சேர்ந்த வீரமணி (50) என்பதும், இவர் திருச்சி பேருந்து நிலையம் அருகே வாடகை கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.  இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி மாலை திருவானைக்காதெப்பகுளம் பகுதியைச் சேர்ந்த மர்ம் நபர்கள் இருவர் வீரமணியை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு, சேலத்துக்கு உடனடியாக செல்ல வாடகைக்கு கார் வேண்டும் எனக் கூறி
    வந்துள்ளனர்.
    இதையடுத்து வீரமணி அவர்களை அழைத்துக் கொண்டு சேலம் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் வீரமணியை தாக்கி கொலை செய்துவிட்டு, திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி பிரதான சாலை, பள்ளத்தூரில் தள்ளிவிட்டு காரை கடத்திச் சென்றது விசாரணையில்
    தெரியவந்தது.
    இதுகுறித்து கந்திலி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். காருக்காக வீரமணி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai