சுடச்சுட

  

  வேலூரில் சர்வதேச பேரிடர் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை (அக்.13) நடைபெறுகிறது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  அக்டோபர் மாதம் 13-ஆம் தேதியை சர்வதேச பேரிடர் தணிக்கும் தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. நிகழாண்டில் வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் தொடங்கும் சர்வதேச பேரிடர் விழிப்புணர்வுப் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அண்ணா சாலையில் உள்ள காந்தி சிலையில் நிறைவடைகிறது.
  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் பேரணியில் சாரண, சாரணீய மாணவர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர், நேரு யுவகேந்திர மையத்தைச் சேர்ந்தவர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் கலந்து கொள்கின்றனர்.
  அதேபோல, வட்டத் தலைநகரங்களில் சர்வதேச பேரிடர் விழிப்புணர்வுப் பேரணி வட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai