சுடச்சுட

    

    போலிச் சான்றிதழ் அளித்து கடவுச்சீட்டு: 15 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 12th October 2016 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் போலி கல்விச் சான்றிதழ் அளித்து கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) பெற்றதாக மூன்று பெண்கள் உள்பட 15 பேர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
     வேலூர் மாவட்டத்தில் கடவுச்சீட்டு பெறும்போது அளிக்கப்படும் சான்றிதழ்கள் உண்மைதானா என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 2013, 14, 15-ஆம் ஆண்டுகளில் கடவுச்சீட்டு பெற்றவர்கள் குறித்து உண்மைத் தன்மை கண்டறியப்பட்டது. அதில் வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெரோஸ் (35), பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த ஷமீன் ரபீக் (36), முனிரா பானு(45), முபினா, மஸ்தான் பாஷா (24), இர்பான் (26), சாதிக் பாஷா (42), கன்சால்பேட்டையைச் சேர்ந்த சையத், மெயின் பஜார் வீதியைச் சேர்ந்த பெரோஸ் (29), தோட்டப்பாளையம் எஸ்.நாகூர், முபாரக் அமீன், காதர் பாஷா, நந்தினி பேகம், ஜான் பாஷா உள்ளிட்ட 15 பேர் போலியான கல்விச் சான்றிதழ் அளித்து கடவுச்சீட்டு பெற்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து 15 பேர் மீது வடக்கு, தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
    இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், கடவுச் சீட்டு பெற்றவர்கள் அளிக்கும் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து அவ்வப்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கண்ட 15 பேர் போலி கல்விச் சான்றிதழ் அளித்து கடவுச்சீட்டு பெற்றது கண்டறியப்பட்டதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
    அரக்கோணத்தில்...
    அரக்கோணம் பகுதிகளில் வசிக்கும் இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கடவுச்சீட்டு பெற போலி சான்றிதழ்கள் அளித்தது தெரியவந்தது.
    கடவுச்சீட்டு அளித்தபிறகு சான்றிதழ்கள் பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது போலி சான்றிதழ்கள் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலர், வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவனுக்கு புகார் அனுப்பினார்.
    காவல் கண்காணிப்பாளரின் உத்தரவை ஏற்று இப்புகார் மீது விசாரணை நடத்திய அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ், அரக்கோணம் ஏபிஎம் சர்ச் பகுதியைச் சேர்ந்த லாவண்யா, மங்கம்மாபேட்டை குமரவேல்,
    நேருஜிநகர் ஜோதி, சாஸ்திரிநகர் பிரபாவதி, விண்டர்பேட்டை நாசர் ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai