சுடச்சுட

    

    ராணிப்பேட்டை மகா ப்ரத்யங்கிரா தேவி கோயிலில் நவராத்திரி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     ராணிப்பேட்டை, பாலாற்றங்கரை, மிஸ்ரி நகரில் உள்ள மகா ப்ரத்யங்கிரா தேவி கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம்.
    இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. நிறைவு விழா செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
    விழாவையொட்டி காயத்ரி, அன்னபூரணி, பாலதிரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, பெருமாள் வராகி, சரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்களில் ப்ரத்யங்கிரா தேவி அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai