சுடச்சுட

    

    முன் விரோதம் காரணமாக வீட்டின் மாடியில் எரிபொருள் நிரப்பிய பாட்டில் குண்டு வீசியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டையில் வசித்து வருபவர் ஆபாவாணன். 5-க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய இவர், தற்போது நீதிமன்றங்களில் அவ்வழக்குகள் தொடர்பாக ஆஜராகி வருகிறார்.
    இந்நிலையில் இவரது வீட்டு பால்கனியில் மர்ம நபர் ஒருவர் எரிபொருள் நிரப்பிய பாட்டிலை திரியுடன் வீசிவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து அறிந்த ஆபாவாணன், அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நகர காவல் ஆய்வாளர் ரமேஷ், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
    இதுபற்றி போலீஸார் கூறுகையில், பாட்டிலில் இருந்தது பெட்ரோல் அல்ல, மண்ணெண்ணெய் தான். எனினும் விசாரணை தொடர்கிறது. இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai