Enable Javscript for better performance
மொஹரம் திருநாள் அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியில் மொஹரம்  திருநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

    முகமதுநபியின் பேரனான ஹீசைன் இப்னுஅலி, கர்பாலா எனும் இடத்தில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டதை ஷியா பிரிவினர் தியாகத் திருநாளாக (மொஹரம்) அனுசரித்து வருகின்றனர்.
    இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமான புனித மொஹரம் மாதத்தில் 9-வது மற்றும் 10-வது நாளில் உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் உண்ணா நோன்பு இருந்து தங்களது உடலை வருத்தி தியாகத் திருநாளை நினைவு கூர்ந்தனர்.  
    இதில் ரியாஸ் முகமது, அஸ்கர், பீர்முகமது கனி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai