சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.
    வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (30). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் ஆலங்காயத்திலிருந்து நிம்மியம்பட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது நிம்மியம்பட்டு ஏரி கோடி அருகில் உள்ள வளைவு ஒன்றில் திரும்பிய போது, இருசக்கர வாகனம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஆலங்காயம் போலீஸார் குமாரின் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai