சுடச்சுட

  

  செங்கம் பகுதியில் கிராமங்களுக்கு குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்வதால், சிறியரக சரக்கு வாகனத்தில் பொதுமக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதை காவல் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை
  எழுந்துள்ளது.
   செங்கம் புதிய, பழைய பேருந்து நிலையம், போளூர் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து பண்ரேவ், நீப்பத்துறை, மணிக்கல், வலசை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்காக காத்திருக்கும் பொதுமக்களை கண்காணித்து, குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்வதாகக் கூறி போக்குவரத்து விதிகளை மீறி சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றனர்.
   இந்த வாகனத்தில் அளவுக்கு அதிகமான ஆண்கள், பெண்கள் பயணிப்பதுடன், இதில் செல்லும் சிறுவர்கள் வாகனத்தின் பின்பகுதியில் உள்ள கதவில் அமர்ந்தபடி செல்வதை காண முடிகிறது.
   மேலும், குறைந்த கட்டணம் என்பதால், இந்த வாகனத்தில் பயணிக்கும் வயதானவர்கள், வாகனத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இவர்கள் ஏறும் பொழுதோ அல்லது இறங்கும் பொழுதோ வாகன ஓட்டுநர் கவனக்காமல் வாகனத்தை இயக்கினால், அவர்கள் விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது.
  மேலும், இந்த வாகனம் சாலை விபத்தை சந்தித்தால், பெரும் உயிர்ச்சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
  எனவே, போக்குவரத்து விதி
  முறைகளை மீறி சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஏற்றிச் செல்லப்படுவதை கண்காணித்து, வாகன ஓட்டுநர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai