Enable Javscript for better performance
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 17 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 17 பேர் கைது

    By DIN  |   Published on : 13th October 2016 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து முன்னணி பிரமுகர் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாக்கெட் வீசப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து காட்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 17 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    இந்து முன்னணியின் ஆற்காடு நகரத் தலைவர் இளங்கோ மீது மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாக்கெட் வீசி கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
    இச் சம்பவத்தைக் கண்டித்து, சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகே இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 17 பேரைக் கைது செய்த போலீஸார், அவர்களை மாலையில் விடுவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai