சுடச்சுட

    

    ஆற்காடு நகர இந்து முன்னணி நகர தலைவர் மீது செவ்வாய்க்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    ஆற்காடு, ராஜாகோரி தெருவைச் சேர்ந்தவர் எம்.இளங்கோ (36) . ஆற்காடு நகர இந்து முன்னணி அமைப்பின் தலைவராக உள்ளார். மேலும் திரையரங்களில் உள்ள சிற்றுண்டிகளுக்கு உணவுப் பொருள்களை விநியோகிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி, மகளை குடியாத்தம் நகரில் உள்ள உறவினர் வீட்டில் செவ்வாய்க்கிழமை விட்டுவிட்டு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் அருகே இருந்த மர்ம நபர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பையை இளங்கோ மீது வீசியுள்ளார். அதேபோல் எதிர்த் திசையில் இருந்து மற்றொரு மர்ம நபர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பையை வீசியுள்ளார். இதையறிந்த இளங்கோ அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போதும் தொடர்ந்து பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டுள்ளது. எனினும் இளங்கோ காயமின்றி தப்பினார்.
    இதுகுறித்து ஆற்காடு நகர காவல் நிலையத்தில் இளங்கோ புகார் அளித்தார். மேலும் சம்பவ இடத்தை ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆற்காடு நகர ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை  நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai