சுடச்சுட

  

  இளம் விஞ்ஞானி விருது பெற்ற விஐடி மாணவருக்கு பாராட்டு

  By DIN  |   Published on : 13th October 2016 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நோய் தடுப்புக்கான புதிய ஆன்டிபயாடிக்ஸ் மருந்தினை கண்டுபிடித்து விருதுபெற்ற இளம் விஞ்ஞானி பிரசாந்த் மனோகருக்கு விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டு தெரிவித்தார்.
   விஐடி பல்கலைக்கழகம் துருக்கி, நார்வே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, கனடா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள ஆராய்ச்சி அமைப்புகளுடன் இணைந்து ஐஐஎம்ஏஆர் என்ற அமைப்பின் மூலம் பொதுமக்களிடையே நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவதுடன், புதிய ஆன்டிபயாடிக்ஸ் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
   நோய் தாக்குதலைத் தடுக்க தற்போது கார்பாபேனியம், கொலிஸ்டின், டைகிசைக்ளின் ஆகிய ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கு மாற்றாக புதிய ஆன்டிபயாடிக்ஸ் மருந்து கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி போட்டியில் விஐடி பல்கலை. உயிரி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மாணவர் பிரசாந்த் மனோகர் பேராசிரியர் என்.ரமேஷ் வழிகாட்டுதலுடன் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கினார்.
   பேஜ் தெராப்பி என்ற தலைப்புடன் புதிய ஆன்டிபயாடிக்ஸ்க்கான புதிய பாக்டீரியாக்களை உருவாக்கி 3 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்குப் பின் பேஜ் தெராப்பி என்ற புதிய ஆன்டிபயாடிக் ரெஸிஸ்டெண்டை கண்டுபிடித்துள்ளார்.
   கோவாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இறுதி
  கட்டமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் ஆராய்ச்சிகள் வைக்கப்பட்டதில் விஐடி பல்கலை. மாணவர் பிரசாந்த் மனோகரின் பேஜ் தெராப்பி முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டதையடுத்து, இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது.
   இந்த சாதனையை படைத்த மாணவர் பிரசாந்த் மனோகரை வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai