சுடச்சுட

  

  கண்டோபா சுவாமி கோயில் விழா: கரடி முடி தலைப்பாகை அணிந்து நடனமாடிய பக்தர்கள்

  By DIN  |   Published on : 13th October 2016 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாலாஜாபேட்டையில் கண்டோபாசுவாமி மல்லீஸ்வரர் கோயில் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் கரடி முடியால் ஆன தலைப்பாகை அணிந்து நடனமாடி வந்தனர்.
  வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில், தேரடி அருகில் மராட்டிய மன்னர் சிவாஜி வழிபட்ட கண்டோபா சுவாமி மல்லீஸ்வரர் கோயில் உள்ளது. பாவசார சத்திரியர் என்றும், நாமதேவ மராட்டி என்றும், ரங்கோரி என்றும் அழைக்கப்படுகின்ற இனத்தினரின் குல தெய்வமாக இக்கோயில்
  கருதப்படுகிறது.
  இந்த கோயிலில் நவராத்திரி விழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் கொண்டாடப்பட்டது. விஜயதசமியன்று 19 அடி உயரமுள்ள மூங்கில் செம்பு கலசம் அமைத்து பட்டு பீதாம்பரம், பலவிதமான மலர்கள் ஜரிகை நூல் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, கண்டோபா சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மேளவாத்தியங்கள் முழங்க ஆனந்த நடனமாடி திருவீதி உலா வந்தனர்.
  வீதி உலாவின் போது கருப்பு கம்பளி ஆடை, கரடி முடியால் ஆன தலைப்பாகை அணிந்து கையில் உடுக்கையுடன் கண்டோபா சுவாமியின் புகழ்பாடி பக்தர்கள் நடனம் ஆடி வந்தனர்.
  இதனை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai