சுடச்சுட

  

  காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வு, பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்க புதிய மாவட்டத் தலைவராக சி.ரவிவர்மன், செயலாளராக கே.செல்வராஜ், பொருளாளராக எம்.நாகலிங்கம், செய்தித் தொடர்பாளாக க.ராஜா, ஒருங்கிணைப்பாளராக எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  தொடர்ந்து நடைபெற்ற பொதுக் குழுவில், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தொடங்குவது, தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய பணிக்காலத்தை ஓய்வு ஊதியத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai