Enable Javscript for better performance
நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி விழா நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
     அரக்கோணத்தை அடுத்த நெமிலியில்  உள்ள ஸ்ரீபாலா பீடத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் நவராத்திரி இன்னிசை விழா நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்தார். இதில் திரைப்பட பின்னணி பாடகர் அனந்து, இசையமைப்பாளர் ஆர்.கே.சுந்தர், பாடகர் பிரபாகரன், பாடகிகள் சுதாஆனந், மானஸி, அனு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  நிறைவு நிகழ்ச்சியாக ஸ்ரீபாலா ஹோமத்தை பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்து நடத்தி வைத்தார். விழாவையொட்டி சுமங்கலிகளுக்கு சேலைகளும், பெண் குழந்தைகளுக்கு ஆடைகளும் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகள், பேனா, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டன.
     இதில் பாலாபீட நிர்வாகி மோகன், இறைப்பணி மன்றச் செயலர் முரளீதரன், துணைத் தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில்...
    ஆம்பூர், அக். 12: ஆம்பூர் ஏ-கஸ்பா சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.   உற்சவருக்கு மகிஷாசுரமர்தினி அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் மாதர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai