சுடச்சுட

    

     

    வீட்டை விட்டு வெளியேறிய, வழிதவறி வரும் பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களது எதிர்காலத்தை பிரகாசமாக்கும் வகையில் வேலூரில் அரசு மகளிர் பிற்காப்பு மற்றும் வரவேற்பு இல்லம் செயல்பட்டு வருகிறது.
     சமூகப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையத்தில், இதுவரை 81 பெண்களுக்கு திருமணம் செய்து குடும்பம் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
     பெற்றோரால் கைவிடப்பட்ட, தாய், தந்தையரை இழந்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடாமல் அவர்களையும் சமூகத்தில் சிறந்தவர்களாக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
    குறிப்பாக அனாதைகளாக்கப்பட்ட, வழிதவறி வரும் பெண் குழந்தைகள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுவதால், அவர்களைக் காக்கும் வகையில் தமிழகம் முழுவதிலும் சமூகப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் அரசு மகளிர் பிற்காப்பு மற்றும் வரவேற்பு இல்லங்கள் நடத்தப்பட்டு வருகிறது.  வெளிமாநிலங்களில் இருந்து வழிதவறி வரும் பெண் குழந்தைகளை சம்பந்தப்பட்ட மாநிலத்தில் செயல்படும் வரவேற்பு இல்ல அதிகாரிகளிடம் ஒப்படைப்பது, தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வழிதவறி வரும் பெண் குழந்தைகளை மீட்டு மகளிர் காப்பகங்களில் ஒப்படைத்து படிப்பறிவுக்கு வழி ஏற்படுத்துவது போன்றவை இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
     வேலூரில் சமூகப் பாதுகாப்புத் துறையால் நிர்வகிக்கப்படும் வரவேற்பு இல்லத்தில் 18 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு ஓராண்டு தொழில் பயிற்சி, குறுகிய கால எம்பிராய்டரி, புத்தக பைண்டிங், செயற்கை நகை தயாரிப்பு, மின் பொம்மை தயாரிப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்
    படுகிறது. இதனால் யாருடைய தயவுமின்றி எதிர்காலத்தை சிறந்ததாக்கிக் கொள்ள அவர்களுக்கு வழி ஏற்படுத்தப்படுகிறது.
     வேலூரில் உள்ள இந்த மைய பராமரிப்பில் இருந்து இதுவரை 81 பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து அரசு மகளிர் பிற்காப்பு மற்றும் வரவேற்பு இல்ல கண்காணிப்பாளர் ந.உமாமகேஸ்வரி கூறியதாவது:
     தாய், தந்தையரை இழந்த, வழிதவறி வரும் பெண்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
     இந்த மையத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், அவர்களை திருமணம் செய்ய முன்வருவோர் குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து விருப்பத்தைப் பெற்று நடத்தி வைக்கப்படுகிறது. இதுவரையில் இந்த மையத்தில் இருந்து 81 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களை குடும்பமாக வாழ வைத்திருப்பது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai