Enable Javscript for better performance
மகன், மகளுடன் தந்தை மாயம்- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மகன், மகளை அழைத்துக் கொண்டு தந்தை மாயமானார்.
     குடியாத்தம் செதுக்கரை, பொன்னம்பட்டி ரோட்டைச் சேர்ந்தவர் ராஜா (35). இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு கீர்த்தனா (8) என்ற மகளும், கணேஷ் (5) என்ற மகனும் உள்ளனர். தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
    கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜா, மகனையும், மகளையும் அழைத்துக் கொண்டு மாயமானதாகக் கூறப்படுகிறது. உறவினர்களின் வீடுகளில் தேடியும் இவர்கள் கிடைக்காததால், நகர காவல் நிலையத்தில் பூங்கொடி புதன்கிழமை புகார் கொடுத்தார்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai