மாணவி கடத்தல்: 3 பேர் கைது
By DIN | Published on : 13th October 2016 12:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கே.வி. குப்பம் அருகே மாணவியை கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கே.வி. குப்பத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது பாட்டி வீடு கொணவட்டத்தில் உள்ளது.
அடிக்கடி அங்கு சென்று வந்த மாணவியை, அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (19) காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவியை, ஆறுமுகம், அவரது தந்தை அபிமன்னன் (47), சித்தப்பா வேலு (43) ஆகியோர் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த கே.வி.குப்பம் போலீஸார், காட்பாடி பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நின்றிருந்த ஆறுமுகம், அபிமன்னன், வேலு ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.