Enable Javscript for better performance
அரசுப் பள்ளிக்கு இருக்கைகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையிலான இருக்கைகளை மக்களவை உறுப்பினர் பா.செங்குட்டுவன் வியாழக்கிழமை வழங்கினார்.
     விழாவுக்கு பென்னாத்தூர் பேரூராட்சித் தலைவர் ப.அருள்நாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.ஆர்.வெங்கடேசன், பொருளாளர் சி.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் 100 செட் இருக்கைகளை மக்களவை உறுப்பினர் பா.செங்குட்டுவன் வழங்கினார்.  
     தலைமை ஆசிரியர் க.தேவராஜன் வரவேற்றார். கணியம்பாடி ஒன்றியக் குழுத் தலைவர் எம்.ராகவன், வார்டு உறுப்பினர்கள் எஸ்.குப்பன், டி.குமரேசன், என்.சண்முகப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   முன்னதாக, நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். உதவித் தலைமை ஆசிரியர் என்.பாபு நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai