Enable Javscript for better performance
"ஆராய்ச்சி மாணவர்கள் கூடுதல் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "ஆராய்ச்சி மாணவர்கள் கூடுதல் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்'

    By DIN  |   Published on : 14th October 2016 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆராய்ச்சி மாணவர்கள் தாங்கள் தேர்ந்தடுக்கப்பட்டுள்ள துறை தொடர்பான ஆராய்ச்சி முறை கல்வியில் கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் க.முருகன் கூறினார்.
     திருவள்ளுவர் பல்கலைக்கழக திறன் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிம் கேர் டிரஸ்ட் இணைந்து நடத்திய ஆராய்ச்சி முறை பயிலரங்கு தொடக்க விழா பல்கலைக்கழக வளாக கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
     நிகழ்ச்சியில் பல்கலைக்கழக புல முதல்வர் பெருவழுதி வரவேற்புரை ஆற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
     இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் தாங்கள் துறை தொடர்பான ஆராய்ச்சி முறை கல்வியில் பின் தங்கியே உள்ளனர். எனவே இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் தாங்கள் ஆராய்ச்சி முறை கல்வியில் கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    இப் பயிற்சிப் பட்டறையில் திறமைவாய்ந்த விஞ்ஞானிகள் பயிற்சியளிக்க உள்ளனர். எனவே மாணவ, மாணவிகள் கவனமாகக் கேட்டறிந்து பயனடைய வேண்டும் என்றார்.
     நிகழ்ச்சியில் உயிரி விஞ்ஞானி அருண்குமார், சர்வதேச மரபியல் விஞ்ஞானி கே.குமார மாணிக்கவேல், வேலூர் விஐடி பல்கலைக்கழக மரபியல் துறை விஞ்ஞானி ராதா சரஸ்வதி, பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் செந்தில்குமார், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai