சுடச்சுட

    

    இளம் ஆராய்ச்சியாளர்கள் பங்களிப்பு அவசியம்: சுனில் டி.சாண்டி

    By DIN  |   Published on : 14th October 2016 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாசற்ற உயிரி எரிபொருள் உற்பத்தி, உணவு உற்பத்திக்கான வளங்களை விரிவுபடுத்துதலில் இளம் ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு அவசியம் என வேலூர் சிஎம்சி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் சுனில் டி.சாண்டி கூறினார்.
     விஐடி பல்கலைக்கழகத்தின் உயிரி அறிவியல் தொழில்நுட்பப் பள்ளி மற்றும் மத்திய அரசின் உயிரி தொழில் நுட்பத் துறை இணைந்து உயிரி தொழில் நுட்பம், கணினி உயிரியலில் எதிர்காலத் திருப்பங்கள் குறித்த கருத்தரங்கம் விஐடி பல்கலை.யில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை வகித்தார். கருத்தரங்கை தொடங்கி வைத்து சிஎம்சி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் சுனில் டி.சாண்டி பேசியதாவது:
     உயிரி தொழில்நுட்பம் மருத்துவத்துக்கும், பொறியியலுக்கும் பாலமாக உள்ளது. நோய் தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் இடையூறுகளைப் போக்கும் பணியில் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட வேண்டும்.
     அதேபோல, மாசற்ற உயிரி எரிபொருள் உற்பத்தி, உணவு உற்பத்திக்கான வளங்களை விரிவுபடுத்துதலில் இளம் ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு அவசியமானது என்றார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து உயிரி தொழில் நுட்பத் துறைத் தலைவர் கே.ராமநாதன் விளக்கினார்.
     ஐஐடி சென்னை பேராசிரியர் மைக்கேல் குரோமைய்யா, விஐடி உயிரி அறிவியல் தொழில் நுட்பப் பள்ளி முதல்வர் கே.எம்.கோதண்டம், பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த இளம் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai