சுடச்சுட

  

  அரசிதழில் வெளியிடாததால், ஊராட்சி மன்றத் தலைவரை தகுதி நீக்கம் செய்து மாநிலத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
   வேலூர் மாவட்டம், அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள தணிகைபோளூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரளா தேவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
   2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றேன். தேர்தலுக்குப் பின் செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து, 2013 அக்டோபர் 7-இல் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
   ஆனால், அப்போதைய வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்தேன். தற்போது, அந்த அதிகாரி ஓய்வு பெற்று சென்று விட்டார்.
   இந்தத் தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை அரசிதழில் வெளியிடாததால், உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
   இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "தகுதி நீக்க உத்தரவு சட்டப்படி அரசிதழில் வெளியிடப்படாததால், மனுதாரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்ற கேள்வியே எழவில்லை. எனவே, மாநிலத் தேர்தல் ஆணையம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மனுதாரர் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai