சுடச்சுட

  

  திருப்பத்தூர் அருகே கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
   வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த பா.முத்தம்பட்டி அண்டிவட்டத்தைச் சேர்ந்தவர் அன்பு (37). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்ற அன்பு, மருத்துவ காலனி அருகே இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு மாலை 5 மணியளவில் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  
   இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, உடலில் பலத்த காயங்களுடனும், முகம், கை பகுதிகள் தீயில் கருகிய நிலையிலும் அன்பு இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் செந்தில், போலீஸார், அன்புவின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai