Enable Javscript for better performance
காட்பாடி வரும் ரயில்களின் புதிய கால அட்டவணை அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    காட்பாடி வரும் ரயில்களின் புதிய கால அட்டவணை அறிவிப்பு

    By DIN  |   Published on : 14th October 2016 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் ரயில்களின் நேரம் குறித்து பயணிகள் தெரிந்து கொள்ள ஏதுவாக புதிய கால அட்டவணை வியாழக்கிழமை வைக்கப்பட்டது.
    கடந்த 1}ஆம் தேதி முதல் தேதியிலிருந்து ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து பெங்களூருவுக்குச் செல்லும் சதாப்தி, பெங்களூரு விரைவு ரயில், பிருந்தாவன், ஏசி டபுள் டக்கர், கோவைக்குச் செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில், மங்களூருவுக்குச் செல்லும் அதிவிரைவு ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்துக்கு 9 முதல் 15 நிமிடங்கள் முன்னதாக வந்து செல்கின்றன.
    குறிப்பாக காட்பாடி ரயில் நிலையத்துக்கு காலை 9.53-க்கு இதுவரையில் வந்த பெங்களூரு செல்லும் பிருந்தாவன் விரைவு ரயில் தற்போது 9.40-க்கும், பிற்பகல் 1.33-க்கு வந்த பெங்களூரு விரைவு ரயில் 1.18-க்கும் வந்து செல்வதால், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்ட விவரம் தெரியாமல் வழக்கமான நேரத்துக்கு வந்து செல்லும் பயணிகள் ரயிலை தவற விடும் நிகழ்வு தினந்தோறும் நடந்து வந்தது.
    இதையடுத்து காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் ரயில்களின் மாற்றியமைக்கப்பட்ட புதிய கால அட்டவணை முழுமையாகத் தயாரிக்கப்பட்டு வியாழக்கிழமை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருப்பது பயணிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
    இதுகுறித்து காட்பாடி ரயில் நிலைய மேலாளர் மதிவாணன் கூறியதாவது: அக்டோபர் முதல் தேதியிலிருந்து ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ள தகவல் பயணிகள் பலருக்கு தெரியாததால் தாங்கள் பயணிக்க வேண்டிய ரயில்களை பலர் தவற விட நேரிட்டது. ரயில்கள் வந்து செல்லும் புதிய கால அட்டவணை அமைக்க வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து பெயிண்டில் எழுதிய புதிய அட்டவணை பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai