சுடச்சுட

    

    சாராயம், வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (25). இவர், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்ததால் குடியாத்தம் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அதேபோல, ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல் (22). இவர், சங்கிலி பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai