சுடச்சுட

  

  குடியாத்தம் அருகே செம்மரம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவர் உயிரிழந்தார்.
   குடியாத்தத்தை அடுத்த மோர்தானா ஊராட்சி, கோக்கலூரைச் சேர்ந்த முனிரத்தினம் மகன் முனிசாமி (28). இவர் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி பேர்ணாம்பட்டு வனத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
   இதையடுத்து அவர் சில நாள்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தினமும் பேர்ணாம்பட்டு வனச் சரக அலுவலகத்துக்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
  இந்நிலையில் கையெழுத்திட வனத்துறை அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்ற முனிசாமி அங்கு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு புதன்கிழமை இரவு அவர் இறந்தார்.
  இதுகுறித்து கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
   இந்நிலையில் வனத் துறையினர் தாக்கியதால் தான் முனிசாமி இறந்தார் எனவும், வனத் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் முனிசாமியின் உறவினர்கள் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர்.
   புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என போலீஸார் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai