சுடச்சுட

    

    பேரிடர் விழிப்புணர்வுப் பேரணி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 14th October 2016 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சர்வதேச பேரிடர் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
    சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள் ஆண்டுதோறும் அக்.13-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேதாஜி விளையாட்டரங்கிலிருந்து பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அண்ணாசாலை வழியாக கோட்டை மைதானத்தைச் சென்றடைந்த பேரணியில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற 1,500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.
    இதனைத்தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தீயணைப்பு மீட்புக் குழுவினர் கோட்டை அகழியில் மீட்பு நடவடிக்கைகளை செய்து காண்பித்தனர்.
    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலாளர் இந்திரநாத், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஸ்ரீராம், தீயணைப்பு மீட்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார், மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் முருகேஷ், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    அதேபோல, காட்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரிடர் விழிப்புணர்வுப் பேரணி சித்தூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. மாணவ, மாணவிகள், செஞ்சிலுவைச் சங்கத்தினர், தீயணைப்பு, காவல் துறையினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
    அரக்கோணத்தில்...
    அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு, வட்டாட்சியர் குமரவேல் தலைமை வகித்தார். இதில் வருவாய் ஆய்வாளர்கள் அருள்செல்வன், கணேசன், வித்யா, கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோருடன் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். பேரணி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் முடிவடைந்தது. அங்கு அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்புத் துறையினர் பேரிடர் பாதுகாப்பு குறித்து செயல்விளக்கம்
    அளித்தனர்.
    ஆற்காட்டில்...
    ஆற்காடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை வட்டாட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்.
     மண்டலத் துணை வட்டாட்சியர் எஸ்.ரவி முன்னிலை வகித்தார். கலவை சாலை, அண்ணா சாலை, முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம், பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.
    இதில், வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம், மகாலட்சுமி  செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
    வாலாஜாபேட்டையில்...
    வாலாஜாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை வாலாஜா வட்டாட்சியர் பிரியா தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச்  சென்று வாலாஜா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது.
     ஊர்வலத்தில் மண்டலத் துணை வட்டாட்சியர் ஜெயகுமார், வருவாய் ஆய்வாளர் மகாலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்
    ஆம்பூரில்...
    ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியர் ரூபிபாய் தலைமை வகித்தார். பின்னர் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தீயணைப்புத் துறையினரின் பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
     ஆம்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் உசேன் ஷெரீப் தலைமையிலான தீயணைப்புத் துறை பணியாளர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    வாணியம்பாடியில்...
    திருப்பத்தூரில் நடைபெற்ற ஊர்வலத்தை சார்-ஆட்சியர்(பொறுப்பு) முகமது முனீர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் நரசிம்மன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கிருஷ்ணவேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் தூயநெஞ்சக் கல்லூரி அருகே இருந்து புது பேருந்துநிலையம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றது. தொடர்ந்து திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பன்னீர் செல்வம் தலைமையில் பேரிடர் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
     நாட்டறம்பள்ளியில் வட்டாட்சியர் சச்சுதானந்தன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து புறப்பட்டு பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
    ஒன்றியக் குழுத் தலைவர் பாரதிராஜா, பேரூராட்சித் தலைவர் சரோஜாசலம், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai