சுடச்சுட

    

    மடத்தின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் பொருள்கள் திருட்டு

    By DIN  |   Published on : 14th October 2016 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பத்தூரில் பிரசித்தி பெற்ற ராமனுஜர் மடத்தின் பூட்டை உடைத்து
    ரூ. 10 லட்சம் மதிப்பிலான தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், செட்டி தெருவில் பழைமைவாய்ந்த ராமானுஜர் மடம் உள்ளது. இந்த மடத்தை ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்பட 10 பேர் கொண்ட அறக்கட்டளை உறுப்பினர்கள் நிர்வகித்து வருகின்றனர். மடத்தின் பாதுகாவலராக அறக்கட்டளை உறுப்பினர் பெருமாள் மடத்திலேயே தங்கிப் பணியாற்றி வருகிறார். பெருமாள் வெளியூருக்கு புதன்கிழமை சென்றுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை மடத்தைப் பார்க்க ராமச்சந்திரன் வந்துள்ளார்.
    அப்போது மடத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மடத்தில் ஆறு பூட்டுகளையும் உடைத்து மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளையும், அறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிக் கவசம் 2, கிரீடம் 2 உள்பட 10 கிலோ வெள்ளிப் பொருள்களையும், 2 தங்கத் தாலி, கம்மல், கழுத்துச் சங்கிலி உள்பட 15 பவுன் தங்க நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பாதுகாப்புப் பணியில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், புதன்கிழமை இரவு திருடிச் சென்றதும் தெரியவந்தது. திருடுபோன பொருள்களின் மதிப்பு ரூ. 10 லட்சம் எனக் கூறப்படுகிறது.
    இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
    திருப்பத்தூர் டிஎஸ்பி பன்னீர்செல்வம் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai