சுடச்சுட

    

    வேலூரில் குடும்பத் தகராறில் மருமகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொலை செய்ததாக மாமியார் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
     வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரபீக் (35). இவரது மனைவி ரிஸ்வானாவுக்கும் (28), தாய் சலீமாவுக்குமிடையே (55) குடும்பப் பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.  இந்த நிலையில், புதன்கிழமை இரவு இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் ரிஸ்வானா மீது அவரது மாமியார் சலீமா மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஸ்வானா வியாழக்கிழமை இறந்தார்.  இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து சலீமாவைக் கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai