சுடச்சுட

    

    திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் 15 வருடங்களுக்கு பின்பு கைது செய்யப்பட்டார்.
    கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளியில் வீடு புகுந்து திருடிய வழக்கில்  ஆந்திர மாநிலம், குப்பத்தை அடுத்த குடுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரமேஷை (39) நாட்டறம்பள்ளி போலீஸார் தேடி வந்தனர். இவர் கடந்த 15 வருடங்களாக போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் குடுப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் ரமேஷ் பதுங்கி இருப்பதாக நாட்டறம்பள்ளி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாட்டறம்பள்ளி உதவி காவல் ஆய்வாளர்கள் அன்பழகன், இளையகுமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார் வீட்டை சுற்றி வளைத்து, அங்கு பதுங்கி இருந்த ரமேஷை கைது செய்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
    பின்னர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai