Enable Javscript for better performance
அஞ்சல் தலைக் கண்காட்சி: மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    அஞ்சல் தலைக் கண்காட்சி: மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 15th October 2016 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி, பெல் டிஏவி பள்ளி மாணவர்களால் சேகரிக்கப்பட்ட அரிய அஞ்சல் தலைகள் கண்காட்சி ராணிப்பேட்டை தலைமை அஞ்சலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    அஞ்சல் துறையின் பெருமையையும், அதன் சேவைகளையும் அனைவரும் அறிந்திடும் நோக்கில் இந்திய அஞ்சல் துறை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை தலைமை அஞ்சலகம் சார்பில், தேசிய அஞ்சல் வார விழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தேசிய சேமிப்பு தினம், தபால் மற்றும் அஞ்சல் தலைகள் சேகரிப்பு தினம், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு தினம், வணிக முன்னேற்ற தினம், வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ராணிப்பேட்டை பெல் டிஏவி பள்ளி மாணவர்களான தினேஷ், கமலக்கண்ணன், ஜோசப், இந்துஜா ஆகியோரால் சேகரிக்கப்பட்ட அரிய அஞ்சல் தலைகள் தலைமை அஞ்சலக வளாகத்தில் கண்காட்சிக்காக வியாழக்கிழமை வைக்கப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு, தலைமை அஞ்சலக அலுவலர்கள் வனிதாமணி, நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரக்கோணம் கோட்ட கண்காணிப்பாளர் லோகநாதன் தபால் தலை கண்காட்சியை தொடங்கி வைத்து அஞ்சல் துறையின் சேவைகள் குறித்துப் பேசினார்.
    இக்கண்காட்சியை ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஞ்சலக வணிகப் பிரிவு அலுவலர் சிவகுமார், அஞ்சலக ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai