சுடச்சுட

  

  முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் பேரணி காட்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  பள்ளிக் கல்வித் துறை சார்பில், காட்பாடி காந்தி நகரில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி மீண்டும் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து என்சிசி, நாட்டு நலப்பணி, சாரண, சாரணீய இயக்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
  வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் டி.மனோகரன், பி.பிரியதர்ஷினி, வட்டாட்சியர் ஜகன், நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர்கள் எல்.சீனிவாசன், எஸ்.அற்புதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  குடியாத்தத்தில்...
  குடியாத்தம், அக். 14: குடியாத்தம் அப்துல் கலாம் நற்பணி இயக்கம் சார்பில், அவரது 85- வது பிறந்த நாள் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  நிகழ்ச்சிக்கு அமைப்பின் கௌரவத் தலைவர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியை ஜெனீப்பர் பிலிப் வரவேற்றார். ரோட்டரி நிர்வாகி எஸ்.எஸ்.சிவ வடிவு சிறப்புரையாற்றினார்.  
  விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு வழக்குரைஞர் கே.எம்.பூபதி பரிசுகள், இனிப்பு வழங்கினார்.
  அமைப்பின் நிறுவனர் கே.ஜே.சீனிவாசன், தலைவர் ஜே.சிவகுமார், பொதுச் செயலர் எஸ். பெரியசாமி, பள்ளித் தாளாளர் பிலிப்பக்த பிரசன்னா, புலவர் வே.பதுமனார், புலவர் சண்முகசெங்கல்வராயன், அபிராமி மகளிர் கல்லூரித் தலைவர் எம்.என்.ஜோதிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் எம்.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai