சுடச்சுட

    

    ஆம்பூர் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமானது.
    ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தில் மாநில நெடுஞ்சாலையோரம் ஆனந்தன் என்பவர் பழக் கடையும், அர்ஜுனன் இனிப்பு கடையும், சரவணன் தேநீர் கடையும், ரமேஷ் பெட்டிக் கடையும், ஜெயராமன் மளிகைக் கடையையும் அடுத்தடுத்து நடத்தி வந்தனர்.  இவற்றின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது.
    இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென மேற்கூரை எரியத் தொடங்கியது. அதைப் பார்த்த மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    ஆம்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் உசேன் ஷெரீப் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.
    ஆனாலும் 5 கடைகளும், அதில் வைக்கப்பட்டிருந்த பொருள்களும் எரிந்து நாசமானது.
     தீ விபத்து குறித்து உமர்ஆபாத் போலீஸார் வழக்குப் பதிந்து விசராணை நடத்தினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai