சுடச்சுட

    

    "இணையதளத்தில் தேடுவதை விடுத்து நூலகங்களில் தகவல் திரட்ட வேண்டும்'

    By DIN  |   Published on : 15th October 2016 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தகவல்களை இணையதளத்தில் திரட்டுவதை விடுத்து, நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.முருகன் கூறினார்.
    வேலூர் ஊரீசுக் கல்லூரியில் 31-வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிஎஸ்ஐ பேராயர் ஏ.ராஜவேலு தலைமை வகித்தார். முதல்வர் (பொறுப்பு) எஸ்.எழில் கிறிஸ்துதாஸ் வரவேற்றார்.
    இளங்கலை, முதுகலையில் பல்கலை. அளவில் சிறப்பிடம் பெற்ற 17 பேர் உள்பட 730 பேருக்கு பட்டங்களை வழங்கி திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர்
    கே.முருகன் பேசியதாவது:
    பிளாஸ்டிக், மருத்துவமனை, கோழிக் கழிவு மட்டுமல்லாது கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்குவது போன்றவைகளால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் பரவ நாம் தான் காரணமாக இருக்கின்றோம். நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு, இயற்கை உரங்களை விவசாயம் செய்ய பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் உற்பத்தி, நிலங்கள் பாதிக்கப்படாமல் தடுக்க
    முடியும்.
    நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அதேபோல, பிறரை மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். தகவல்களை இணையதளங்களில் திரட்டுவதை விடுத்து, நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும்.   வாழ்க்கையில் வெற்றி பெற கிடைக்கும் நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
    விழாவில், தேர்வுக் கட்டுப்பாட்டு நெறியாளர் டி.கோதண்டராமன், துணை முதல்வர்கள் எம்.ஜெயசெல்வதாஸ், இ.ஆர்.எஸ்.குமார், நிதியாளுநர் ஐ.ஸ்டான்லி ஜோசப் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai