சுடச்சுட

  

  திருக்குறள் தமிழ்பேரவையின் அரக்கோணம் கிளையினர், மெடிமிக்ஸ் நிறுவனத்தினர் இணைந்து அரக்கோணத்தை அடுத்த சோகனூர், செம்பேடு, கிழவனம், இச்சிபுத்தூர், கைலாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உலக கை கழுவும் தினத்தை வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.
  இதில் மாணவ, மாணவிகளுக்கு ஆறு முறைப்படி கைகழுவுதல் குறித்து பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு சோப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சோப்பு திரவங்கள் வழங்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு தினமும் கை கழுவ பயிற்சி அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
  நிகழ்ச்சிகளில் இச்சிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் நா.வேல்குமார், ஆசிரியர் தோ.வெ.அருணவடிவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai