Enable Javscript for better performance
சுயதொழில் தொடங்க ரூ. 6 லட்சம் கடனுதவி- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் வனத் துறை சார்பில், கல்லப்பாடி ஊராட்சி, கே. புதூர் கிராமத்தில் வாழும் 46 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ. 6 லட்சம் கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
    காடு வளர்ப்புத் திட்டத்தின்கீழ், இக்கிராமம் வனத் துறையால் தத்தெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிராமத்தில் வறுமைக் கோட்டுக்குக்கீழ், வாழும் 46 பேர் சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் வனச் சரக அலுவலர் எல்.குமார் தலைமை வகித்தார். வனக் குழுத் தலைவர் கே.முனிராஜன் வரவேற்றார். கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜி.லோகநாதன் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
    அதிமுக கிழக்கு மாவட்ட முன்னாள் செயலர் வி.ராமு, ஒன்றியச் செயலர் டி.சிவா, வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர்கள் கொட்டமிட்டா எம்.பாபு, என்.கே.ராஜாமணி, ஆத்மா திட்டத் தலைவர் நாகராஜ், செட்டிகுப்பம் ஊராட்சி முன்னாள் தலைவர் செ.கு.வெங்கடேசன், அண்ணா தொழிற்சங்க மாநிலப் பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி, வனவர் பி.அரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai