Enable Javscript for better performance
தர்காவில் உண்டியல் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

     அரக்கோணம் பஜார் பகுதியில் உள்ள மஸ்தான் தர்காவில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை மர்மநபர்கள் புதன்கிழமை இரவு திருடிச்சென்றனர்.
    அரக்கோணம் நகராட்சி நாளங்காடி அருகில், பழைமை வாய்ந்த மஸ்தான் தர்கா உள்ளது.
    இந்த தர்காவுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக தர்காவில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை காலை தர்காவை திறக்க தர்கா நிர்வாகி சாய்ஷெரிப் (40) வந்தார். அப்போது உண்டியல் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.  
    இது தொடர்பாக அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.   அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி
    வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai