Enable Javscript for better performance
பழைய மீன் மார்க்கெட் கடைகளை குலுக்கல் முறையில் ஒதுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பழைய மீன் மார்க்கெட் கடைகளை குலுக்கல் முறையில் ஒதுக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரைக்கடை வியாபாரிகளுக்காக கட்டப்பட்டுள்ள கடைகளை குலுக்கல் முறையில் ஒதுக்க வேண்டும் என அனைத்து வணிகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
     வேலூரில் பழைய மீன் மார்க்கெட் கடைகள், வேலூர் அனைத்து வணிகர்கள், காவல் துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டச் செயலாளர் இரா.ப.ஞானவேலு தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் எம்.அறிவழகன், சீதாராமன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டப் பொருளாளர் அருண்பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    மாநகராட்சி மன்ற தீர்மானத்தின்படி, பழைய மீன் மார்க்கெட் கடைகளை சாலையோர வணிகர்களுக்கு ஒதுக்கியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இங்குள்ள 256 கடைகள் குலுக்கல் முறையில் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், இங்குள்ள வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சாலையோரம் கடைகள் வைத்தால் காவல் துறை பொருள்களைப் பறிமுதல் செய்வதோடு, லாங்கு பஜாரில் சாலையோர கடைகள் வைக்க அனுமதியில்லை என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும், லாங்கு பஜார் அமைந்துள்ள கிருபானந்த வாரியார் சாலையில் பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai