Enable Javscript for better performance
மேல்பட்டி அருகே கோஷ்டி மோதல்: 7 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பேர்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி அருகே  கோஷ்டி மோதல் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
     மேல்பட்டியை அடுத்த கருணீகசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வில்வநாதன் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் சூரியா (19). இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது.
    இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் காயமடைந்து மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
     புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், சூரியா அவரது தரப்பைச் சேர்ந்த ரமேஷ் (22), பாஸ்கர் (22), சந்திரசேகரன் (26), சௌந்தர் (23) ஆகிய 5 பேரையும், எதிர் தரப்பைச் சேர்ந்த வில்வநாதன், சுதாகர்(19) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai