சுடச்சுட

  

  திமுக தலைவர் கருணாநிதி குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  வாணியம்பாடியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் தேவகுமார். வேலூர் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி அமைப்பாளராக உள்ளார். இவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்திருப்பதாவது:
  அம்மா சிங்கம் கவிதா வேலூர் என்பவரின் முகநூல் கணக்கில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி மாலை 4 மணிக்கு திமுக பற்றியும், திமுக தலைவர் பற்றியும்  பொய்யான வதந்தி
  பதிவாகியுள்ளது.
  இதனை நான் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கண்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். எனவே பொய்யான, அவதூறான செய்தியை முகநூலில் பரப்பியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாரில் அவர் கூறியுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai